சிறப்புடன் நடந்த கோடைகால மாணவ பயிற்சி முகாம்கள்

11:36 மு.பகல் இல் செப்டம்பர் 25, 2008 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்


இளம் மாணவர்களின் இதயத்தில் இஸ்லாமிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் விதமாக வருடந்தோறும் பள்ளி விடுமுறை நாட்களில் தமுமுக சார்பில் கோடைகால பயிற்சி முகாம் நடந்துவருவது அறிந்ததே. இந்த வருடமும் கோடைகால பயிற்சி முகாம்கள் நெல்லை மாவட்டம் புளியங் குடியில் மௌலவி சிவகாசி முஸ்தபா கண்காணிப்பிலும், கிருஷ்ணகிரியில் மௌலவி அப்துல் காதர் நூரி கண் காணிப்பிலும், திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் கோவை சாதிக் அலி கண்காணிப்பிலும் நடைபெற்றன.

பயிற்சி முகாமில் இஸ்லாமிய அடிப்படை, ஒழுக்க மாண்புகள், இறை நம்பிக்கை, ஏகத்துவம், வரலாறு, சமூக சிந் தனை மற்றும் ஆளுமைத்திறன் தொடர் பான வகுப்புகளை பேராசிரியர்கள், மார்க்க அறிஞர்கள், சமுதாய சிந்தனை யாளர்கள் மாணவர்களுக்கு பயிற்றுவித்த னர். பொறியாளர் ஜக்கரியா, பேரா.ஆபி தீன், நூர்முஹம்மது பாகவி, அபுல் ஃபைசல், பெரோஸ்கான், அப்துர் ரஹ்மான் மன்பயீ ஆகியோர் வகுப்பெடுத்த ஆசிரியர் களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

அதிகபட்சமாக நெல்லை புளியங்குடி முகாமில் 130 மாணவர்கள் பங்குகொண்ட னர். பாடங்கள் மட்டுமின்றி வினாடி வினா, சூராக்கள் மனனம், தொழுகைக் கான செயல்முறை பயிற்சி, தேர்வுகள் என முகாம் கலகலப்பாக சென்றது. தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

10 நாட்கள் நடந்த இம்முகாம்களில் இறுதி நாளின்போது மாணவர்களின் கண்கள் கலங்கி இருந்தன. புதிய நட்புகளையும், இனிமையான முகாம் தந்த நினைவுகளையும் தாங்கியிருந்த மாணவச் செல்வங்களை தமுமுக பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் வாழ்த்தி, சமூகத்தில் அவர்கள் ஆற்ற வேண்டிய பங்கினை எடுத்துரைத்து முகாம்களை முடித்து வைத்தார்.

முகாம்களை ஒருங்கிணைக்கும் பணியை மாநில துணை பொதுச் செய லாளர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்கள் மேற்கொண்டார். இஸ்லாமிய மற்றும் சமூகச் சிந்தனையோடு மாணவர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர். அல்ஹம்துலில்லாஹ்!

பெரம்பலூரில் கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்

11:29 மு.பகல் இல் செப்டம்பர் 25, 2008 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்


பெரம்பலூர் மாவட்டத்தில் முதன் முறையாக முஸ்லிம் சமுதாய மாணவ, மாணவிகளுக்காக தமுமுக நடத்திய ”என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?” கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கடந்த 04.05.2008 அன்று பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரெட்டியார் அரங்கில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் மீரா மைதீன் தலைமை வகிக்க மாவட்டச் செயலாளர் அப்துல் அஜீஸ் பாபு, நகர அமைப்பாளர் ஜெய்லானி, அசன் முஹம்மது, ராஜா முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முஹம்மது சித்தீக் வரவேற்றுப் பேசினார்.

அண்ணாமலை பல்கலைக் கழக செனட் உறுப்பினர் காமராசு மற்றும் இளையாங்குடி ஜாகிர் உசைன் கல்லூரி பேரா. ஆபிதீன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஆலோசனைகள் வழங்கினர்.

மாணவ, மாணவிகளின் கேள்விக ளுக்கு தக்க பதில்களும் வழங்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக் கணக்கான மாணவலிமாணவிகள் பங் கேற்றனர்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?

11:25 மு.பகல் இல் செப்டம்பர் 25, 2008 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்

தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக் கென கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப் புகளில் தனி இடஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ள இக்காலக்கட்டத்தில் தமிழக அரசு தேர்வாணையம் மூலமாகவும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக வும் அரசு வேலைக்கு ஆட்களை நியமனம் செய்துகொண்டிருக்கிறது.

அரசு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது மிகமிக அவசியம் ஆகும்.

ஆனால் சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்வ தில் பின்தங்கியே உள்ளனர். அதுபற்றிய அடிப்படைத் தகவல்களை அறியாமல் உள்ளனர்.

எனவே வேலைவாய்ப்பு அலுவலகத் தில் எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து தகவல்களை இங்கே அளிக்கின்றோம்.

குறைந்தது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெற்றதற்கான

(1) மதிப்பெண் சான்றிதழ்
(2) குடும்ப அட்டை
(3) சாதிச் சான்றிதழ்
(4) மாற்றுச் சான்றிதழ்
ஆகிய அனைத்துச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங் களில் பதிவு செய்ய வேண்டும். சென்னையில் சாந்தோம் நெடுஞ்சாலை யில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயணன் மாளிகையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

முன்னதாக அலுவலகத்திற்கு காலை 10 மணியளவில் சென்று பதிவு விண்ணப் பம் பெற்று, அதனை முழுமையாகப் பூர்த்தி செய்து, அதனை உரிய அலுவ லரிடம் ஒப்படைக்க வேண்டும். பதிவு செய்தவுடன் பதிவு செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும். அதனை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண் டும். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனை புதுப்பித்து வர வேண்டும்.
கூடுதல் கல்வித்தகுதியோ அல்லது தொழில்நுட்பத் தகுதியோ அதாவது தட்டச்சு, சுருக்கெழுத்து, கணிணி பயிற்சி முடித்திருந்தால் அதையும் கொண்டு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தப் பதிவானது உங்களுடைய எதிர்கால வேலை வாய்ப்புக்கு உறுதுணை யாக இருக்கும்.

இது அல்லாது தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டு தேர்வுகளை நடத்தும். அதனைக் கண்காணித்து தகுதி பெற்றிருந்தால் உடனடியாக விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

எலக்ட்ரானிக் மீடியா! கல்வித் தகவல்

11:23 மு.பகல் இல் செப்டம்பர் 25, 2008 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்

இந்தியாவில் தொலைக்காட்சி என்றாலே தூர்தர்ஷனும், வானொலி என்றாலே ஆல் இந்தியா ரேடியாவும் தான் என்ற நிலைமை இருந்தது. ஆனால் இன்று தமிழில் மட்டும் 20க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன. பண்பலைகள் மாவட்டந்தோறும் முளைக்க தயாராகிக் கொண்டிருக்கின்றன.

குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை, படுகொலையாளர்களின் வாயில் இருந்தே உண்மைகளை வரவழைத்த டெஹல்கா வின் வீடியோக்காட்சிகளைப் பார்த்தால் இப்போதும் நமது நரம்புகள் முறுக்கேறும்.

பத்திரிக்கைத்துறையின் வளர்ச்சியைவிட, தொலைக்காட்சிகளின் வளர்ச்சியும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. பத்திரிக்கைத் துறையை மட்டுமே தங்கள் கல்வி நிறுவனங்களில் பாடமாக வைத்திருந்த கல்வி நிறுவனங்கள் இன்று தொலைக்காட்சிகளுக்கும் தேவையான திறமையாளர்களை உருவாக்குவதில் தேவையான கவனம் செலுத்தி வருகிறது. மேலும் பண்பலைகளின் வருகையும் வானொலியின் முக்கியத்துவத்தை எலக்ட் ரானிக் மீடியாக்களின் ஆதிக்கத்தை நம்மிடையே பறைசாற்றுகிறது.

தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை விட நியூ மீடியா எனும் இணைய தள இதழ்கள் இன்று விசுவரூபமெடுத் துள்ளன. தொலைக் காட்சி, வானொலி, இணையதளம் ஆகிய மூன்றும் தான் எலக்ட்ரானிக் மீடியா என வகைப்படுத்தப் படுகிறது.

எங்குப் படிக்கலாம்?

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் ஓராண்டு பிராட்காஸ்டிங் மற்றும் நியூ மீடியா ஆகிய படிப்புகளை வழங்குகிறது. இதில் ஹிந்து, பி.பி.சி., ஆகியவற்றில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் பயிற்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் உள்ள ஜாமிஆ மில்லியா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் ‘மாஸ் கம்யூனிகேஷன் அண்ட் ரிசர்ட் சென்டரில் கற்றுத் தரப்படும் ஊடகப் படிப்புகளுக்கு கிராக்கி அதிகம். காரணம் தொலைக்காட்சி நிறுவனங்களில் வேலை பெறுவதே இலக்காகக் கொண்டு இங்கு பயிற்சி அளிக்கப்படுவதே இதற்கு காரணம்.

சென்னையில் அண்ணாப் பல்கலைக் கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி., மற்றும் எம்.எஸ்.சி., எலக்ட்ரானிக்ஸ் மீடியா இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளைப் படிக்க லாம்.

இதுதவிர விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பிலும் தொலைக்காட்சியில் பணிபுரி வதற்கான பயிற்சிகளும் வழங்கப்படு கின்றன. இப்படிப்பை சென்னையில் புதுக்கல்லூரி, லயோலா கல்லூரி, முகம்மது சதக் கல்லூரி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி ஆகியவை வழங்குகின்றன.

பத்திரிக்கையியல் எங்கே படிக்கலாம்?

இரண்டாண்டு எம்.ஏ. ஜர்னலிஸம் தொடர்பான படிப்புகளை சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை வழங்குகின்றன.

நியூ மீடியா என்றால் என்ன?

இணையதளங்களே ‘நியூ மீடியா’ என்றழைக்கப்படுகின்றது. இணையதளங்களில் மட்டுமே வெளி யிடப்படும் பத்திரிக்கைகளின் எண்ணிக்கை இன்று அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு இந்தியாவில் விதையிட்டது டெஹல் காவைக் குறிப்பிடலாம். 1990களில் இந்தியாவில் இணையதளங்களின் எண்ணிக்கை நூறைக்கூடத் தொட வில்லை. ஆனால் இன்று பல லட்சங்களைத் தாண்டி பெருகிக் கொண்டே இருக்கின்றது. இந்தியாவில் மட்டும் 3 கோடிக்கும் மேற்பட்டோர் இணையதளங்களைப் பயன்படுத்து வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இணையதளங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பவர்கள் வெப் டிஸைனர்கள். வெப் டிஸைனிங் கற்றுத் தருவதற்கு பல தனியார் நிறுவனங்கள் உள்ளன. வெப் டிஸைன் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு இணையதள இதழ்களிலும், டாட் காம் நிறுவனங்களிலும் வேலைகள் கிடைக்கும்.

முஸ்லிம்களின் கல்விச் சேவை

11:20 மு.பகல் இல் செப்டம்பர் 25, 2008 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்

இந்தியாவில் முஸ்லிம்களின் கல்வி, மற்றும் சமூகப் பொருளாதார நிலையை ஆய்வு செய்வதற்காக ஐ.மு.கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ராஜேந்தர் சச்சார் குழுவும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையமும், தங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்து விட்டன. சச்சார் குழு அறிக்கை பாராளுமன்றத்திலும் விவா திக்கப்பட்டுள்ளது. ஊடுகதிர் படம் போல முஸ்லிம்களின் நிலையை வெளிப்படுத்தியுள்ள இந்த அறிக்கைகள், கல்வியில் முஸ்லிம் சமுதாயம் மிக மோசமான பின்னடைவில் உள்ளதைத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளன. பல நூறு ஆண்டுகள், ஒருங்கி ணைத்து இந்த நாட்டை உருவாக்கி, ஆட்சி செய்தோர் முஸ்லிம்களாய் இருந்தும் ஏனிந்த பின்னடைவு? வெள்ளை ஏகாதிபத்தியத் தில் அடிமைப்பட்ட இந்தியாவில் விடுதலை வேட்கை வெங்கனலாய் சுடர்ந்தெழுந்தது.

வெள்ளைக்காரர்களுக்கு எதிரானப் போராட்டத்தில் வீரியமாய் முன்னின் றோர் முஸ்லிம்கள். முதல் சுதந்திரப் போரினை முன்னின்று நடத்தியதோடு எல்லா வகையிலும் வெள்ளையர்களை எதிர்த்து நின்றார்கள். அதன் ஓர் அங்கமாக வெள்ளையர்கள் போதித்தக் கல்வியையும் வெறுத்தார்கள். ஆங்கில மொழியையே ஹராம் (தடுக்கப்பட்டது) என அறிவித்தார்கள். வெள்ளிக்கிழமை ஜும்ஆ மேடைகளும், இதற்காகப் பயன் படுத்தப்பட்டன. கல்வியைத் தேடுவது கட்டாயக் கடமை என அறிவுறுத்தப்பட்ட மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலக் கல்வியை ஆவேசமாய் எதிர்த்து, அறி யாமைப் பள்ளத்தாக்கில் முஸ்லிம் சமுதாயம் தன்னை அறியாமலேயே தவறி விழுந்தது.

முஸ்லிம் சமுதாயத்தை முழுவதும் முடக்க விரும்பிய முரட்டு வெள்ளையர் கள், முஸ்லிம்கள் மூடத்திலேயே மூழ்கிக் கிடக்கும் வகையில் பல சதிகளைச் செய்தனர். இதனால் முழுவதுமாக கல்வியிலிருந்து முஸ்லிம் சமுதாயம் கழற்றிவிடப்பட்டது. இந்நேரத்தில், தொலைநோக்கு மிக்க முஸ்லிம் அறிஞர் கள், கல்வி மறுப்பின் விளைவுகளைத் துல்லியமாய் உணர்ந்து துள்ளி எழுந்தனர். சரியான பாதையில் சமுதாயத்தை வழிநடத்த முயன்றனர்.

இதற்குத் தடையாக நின்றவர்கள் அன்றைய முல்லாக்கள், மேற்கத்தியக் கல்வி பயில்வது மார்க்கத்திற்கு விரோதம். திருக்குர்ஆனை மனப்பாடம் செய்வது மட்டுமே கல்வி என அவர்கள் வாதிட்ட னர். அக்கருத்தை மக்களிடம் பரப்பினர். வெள்ளையர்கள் மீதிருந்த வெறுப்பால் முஸ்லிம்களும் ஆங்கிலக் கல்வியை அறவே வெறுத்தனர். ஆங்கிலக் கல்வி இஸ்லாம் மார்க்கத்தை சீர்குலைத்துவிடும் என்ற கருத்தும் பரப்பப்பட்டதால், இந்தச் சமுதாயத்தில் கல்வியை வளர்க்க முனைந்த அறிஞர்கள் கடும் சோதனை களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.

சளைக்காத அறிவுப்போராளி சர் சையத் அஹமத் ‘கான்’

தாழ்வுற்று வறுமை மிஞ்சி, பாழ்பட்டுக் கிடந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு கல்வி விழிப்புணர்வு என்ற கலங்கரை விளக் காய் வந்தவர் சர் சையத் அஹமத் கான். ஏப்.17, 1817ல் டெல்லியில் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் பிறந்த சையத் அஹமத் கான், முறைப்படி பள்ளி சென்று பயிலாதவர். கற்றறிந்த அறிஞர்கள் வாயிலாகக் கல்வியை அடைந்தவர். கிழக்கிந்தியக் கம்பெனியில் உதவிச் செயலாளராக பணியாற்றிய இவர் 1841ம் ஆண்டு சட்டம் பயின்று முன்ஷி பதவிக்குத் தேர்வு பெற்றவர். 1878ம் ஆண்டு துணை நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். 1882ம் ஆண்டு ஆங்கில அரசாங்கம் அவரைக் கல்வி ஆணையத் தின் உறுப்பினராக்கியது.

ஆங்கிலக் கல்வியை அறவே மறுப்ப தால் ஏற்படும் ஆபத்துகளை ஆழமாக உணர்ந்திருந்த சர் சையத் அஹமத் கான், முஸ்லிம்களை நவீன கல்வியைக் கற்குமாறு தூண்டினார். முஸ்லிம்கள் அகத்திலும், புறத்திலும் நவீனமாய்த் திகழவேண்டும் என்று கருதிய அவர் கட்டுப்பெட்டித் தனத்தை விட்டொழிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்தார்.

1864ம் ஆண்டு காஜிப்பூரில் மொழி பெயர்ப்புக் கழகம் (பழ்ஹய்ள்ப்ஹற்ண்ர்ய் நர்ஸ்ரீண்ங்ற்ஹ்) என்ற அமைப்பைத் தொடங்கினார். ஐரோப்பிய நூற்களை உருது மொழியில் மொழிபெயர்த்துப் பரவச் செய்தார். 1866ம் ஆண்டு அலிகர் இன்ஸ்டிட்யூட் கெசட் என்ற வார இதழைத் தொடங்கினார். முஸ்லிம்களிடையே உயர்கல்வி விழிப் புணர்வை ஏற்படுத்த அந்த இதழைப் பயன்படுத்தினார்.

1875ம் ஆண்டு அலிகரில் முஹம்ம தன், ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை உருவாக்கினார். 1920ம் ஆண்டு அந்த கல்லூரி, அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் என்ற பெயர் பெற்று, இன்று வரை சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

கல்வி விதைகள்

1886ம் ஆண்டு சர் சையத் அஹமத் கான் முஸ்லிம் கல்வி மாநாடு என்ற அமைப்பை உருவாக்கினார். அகில இந்திய அளவில் கல்வி விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக் கப்பட்ட இந்த அமைப்பு நாட்டின் முக்கிய நகரங்களில் கல்வி மாநாடுகளை நடத்தி யது. தமிழ்நாட்டிலும் இவ்வமைப்பு தடம் பதித்தது. இவ்வமைப்பின் தூண்டுதலால் தமிழகத்தில் முஸ்லிம்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கினர்.

1873ம் ஆண்டு சென்னை மாகாணத் தின் பொதுக் கல்வி இயக்குநரகம், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நகரங்களில் உருது மீடியம் பள்ளிகளை உடனடியாக நிறுவ ஆணை பிறப்பித்தது. 1901ம் ஆண்டு நடைபெற்ற 15வது முஸ்லிம் கல்வி மாநாட்டின் விளைவாக, புகழ்பெற்ற தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கம் (ஙஊஆநஒ) உருவானது. சென்னை புதுக்கல்லூரி உள்ளிட்ட ஏராளமான கல்வி நிறுவனங் களை மியாஸி நடத்தி வருகிறது.

இஸ்லாமியா கல்லூரி வாணியம்பாடி

வட ஆற்காடு மாவட்டம் வாணியம் பாடி முஸ்லிம்கள், ‘வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கம்’ (யஊஙந) என்ற அமைப்பை 1903ம் ஆண்டு தொடங்கினர். சர் சையத் அஹமத்கானின் கருத்து களால் உண்டான எழுச்சியே இவ்வமைப் பின் தோற்றத்திற்குக் காரணமாகும். 1905ம் ஆண்டு வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கம் பதிவு செய்யப்பட்டது. இஸ்லாமியா தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. ஜனாப் டி.ஹாஜி பத்ருதீன், ஜனாப் மலங் ஹயாத் பாஷா, ஜனாப் டி.அமீனுதீன், ஜனாப் மலங் அஹமது பாஷா ஆகி யோரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில் தொடக்கப்பள்ளி 1912ம் ஆண்டு இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது.

1916ம் ஆண்டு வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரிக்கு பெண்ட்லேண்ட் பிரபுவால் அடிக்கல் நாட்டப்பட்டது. நவாப் சி. அப்துல் ஹக்கீம் போன்ற கொடையாளிகளின் உதவியால் 1919ம் ஆண்டு இஸ்லாமியா கல்லூரி தொடங்கப் பட்டது.
புதுக்கல்லூரி சென்னை 1901ம் ஆண்டு தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கம் பிறந்தது. 1912ம் ஆண்டு முஸ்லிம்களுக்காக ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என மியாசியின் அப் போதையத் தலைவர் நீதிபதி அப்துர் ரஹீம் தீர்மானித்தார். உஸ்மானியா கல்லூரி என்ற பெயரில் அக்கல்லூரி அமைய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. மதரúஸ ஆஸம் பள்ளியில் இன்டர் மீடியட் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

1948ம் ஆண்டு நீதிபதி பஷீர் அஹமது சயித் மியாசியின் செயலாளராக இருந்த போது, ஆடவர் கல்லூரி தொடங்க அனுமதி கோரும் ஆவணங்கள் பல் கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன. 1951ம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதி யும், இணைப்பும், கிடைத்தது. லண்டன் ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்தின் நியூ காலேஜை முன்மாதிரியாக்கி புதுக்கல்லூரி தொடங்கப்பட்டது.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி

விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த கல்வியாளரும், காந்தியடிகளின் மிக நெருங்கிய நண்பருமான ஜமால் முஹம்மது, ஜனாப் என்.எம்.காஜா மைதீன் ராவுத்தர் மற்றும் மஜ்லிஸுல் உலமாவினர் இணைந்து, 1951ம் ஆண்டு புகழ் பெற்ற ஜமால் முஹம்மது கல்லூரியை நிறுவினர்.

காதிர் முகைதீன் கல்லூரி அதிராம்பட்டினம்

எம்.கே.என்.மதரஸா அறக்கட்டளை யால் காதிர் முகைதீன் கல்லூரி துவங்கப் பட்டது. மிகப்பெரும் புரவலரான காதிர் முகைதீன் மற்றும் அவரது சகோதரர் களால் மதரஸா அறக்கட்டளைத் தொடங்கப்பட்டது. ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுத்தீன் அவர்களால் 1955ம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரி தொடங்கப்பட்டது.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் ஏழை, எளிய மக்களும், குறிப்பாக மிகப் பெரும்பான்மையாக முஸ்லிமல்லாத சமுதாயத்தினரும் கல்வி பெற்றுப் பயனடைகின்றனர்.

ஜஸ்டிஸ் பஷீர் அஹமது சயீத் பெண்கள் கல்லூரி சென்னை

தென்னிந்திய கல்விச் சங்கம் 1951ம் ஆண்டு நீதிபதி பஷீர் அஹமத் சயீத் அவர்களால் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் சார்பாக 1955ம் ஆண்டு நீதிபதி பஷீர் அஹமத் சயீத் பெண்கள் கல்லூரி தொடங்கப்பட்டது. புகழ்பெற்ற இக்கல்லூரியில் பெரும்பான்மையாக முஸ்லிம் பெண்களும், சகோதர சமுதாயப் பிரமுகர்களின் பெண்களும் பயின்று பயன்பெறுகின்றனர்.

ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி உத்தமபாளையம்

கருத்த ராவுத்தர் என்ற பெயரால் அறியப்படும் எஸ்.முஹம்மது மீரான் இக்கல்லூரியை நிறுவினார். 1956ம் ஆண்டு முதலமைச்சர் காமராஜர் இக்கல்லூரியைத் தொடங்கி வைத்தார்.

சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி மேல்விஷாரம

1919ம் ஆண்டு துவங்கப்பட்ட மேல்விஷாரம் முஸ்லிம் கல்விச் சங்கம், அதன் நிறுவனரான சி.அப்துல் ஹக்கீம் அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் 1965ம் ஆண்டு சி.அப்துல் ஹக்கீம் கல்லூரியைத் துவங்கியது.

முஹையத் ஷா சர்குரு வக்ஃப் வாரியக் கல்லூரி மதுரை
ஜனாப் ஹீராபாய் மற்றும் கோரிப் பாளையம் எம்.அப்துல் காதர் (எம்.ஏ.கே) ஆகியோரின் பெருமுயற்சியால் திரு. எஸ்.ஜெ.சாதிக் பாஷா அவர்கள் வக்ஃப் வாரிய அமைச்சராக இருந்தபோது எம்.எஸ்.எஸ்.வக்ஃப் வாரியக் கல்லூரி ஜூலை 25, 1968ம் ஆண்டில் தொடங்கப் பட்டது.

மஸ்ஹருல் உலூம் கல்லூரி ஆம்பூர்

ஆம்பூர் முஸ்லிம் கல்விச் சங்கத்தால் 1969ம் ஆண்டு மஸ்ஹருல் உலூம் கல்லூரி துவங்கப்பட்டது.

டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளையான்குடி

கேப்டன் அமீர் அலி உள்ளிட்ட சமூக ஆர்வலர்களால் 1970ம் ஆண்டு இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டது.

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி திருநெல்வேலி

முஸ்லிம் சமுதாயத்தில் அறியாமை இருளை அகற்ற ஆர்வம் கொண்ட முஸ்லிம் ஆர்ஃபனேஜ் கமிட்டி நிர்வாகி களும், சமுதாயப் புரவலர்களும் இணைந்து, ஜூலை 1, 1971ம் ஆண்டு நெல்லை பாளையங்கோட்டையில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியைத் தொடங்கினர்.

காயிதேமில்லத் கல்லூரி மேடவாக்கம், சென்னை

காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையால் 24.07.1975ல் சென்னை மேடவாக்கத்தில் காயிதே மில்லத் கல்லூரி தொடங்கப்பட்டது. சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை, எளிய மக்களும், பெரும்பான்மையாக முஸ்லிமல்லாதோரும் இக்கல்லூரியால் பயன் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

முஸ்லிம் கலைக்கல்லூரி திருவிதாங்கோடு

1981ம் ஆண்டு உருவான முஸ்லிம் கல்விச் சங்கத்தின் முயற்சியால் 1982ம் ஆண்டு திருவிதாங்கோட்டில் முஸ்லிம் கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது.

தாஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி கீழக்கரை

சீதக்காதி அறக்கட்டளையால் 1988ம் ஆண்டு தாஸிம் பீவி மகளிர் கல்லூரி துவங்கப்பட்டது. பெண்கள் உயர் கல்வி பெற இக்கல்லூரி பெரிதும் உதவுகிறது.

முஹம்மது சதக் கலை அறிவியல் கல்லூரி லி சோழிங்கநல்லூர்

1973ம் ஆண்டு உருவான முஹம்மது சதக் அறக்கட்டளையால் 1991ம் ஆண்டு சென்னை சோழிங்கநல்லூரில் முஹம்மது சதக் கல்லூரி தொடங்கப்பட்டது.

ராஜகிரி, தாவூத் பாட்சா கலை, அறிவியல் கல்லூரி பாபநாசம்

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ராஜகிரி தாவூத் பாட்சாவால் துவங்கப்பட்ட இக்கல்லூரி, தரமான உயர்கல்வியை மாணவர்களுக்குத் தந்து வருகிறது.
மேற்கண்ட கலை, அறிவியல் கல்லூரி கள் மட்டுமல்லாமல், ஏராளமான பொறியியல் கல்லூரிகளும், தொழில் நுட்பக் கல்லூரிகளும் முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்கண்ட நிறுவனங்களால் அனைத்து சமுதாய மாணவர்களும் பயன்பெற்று வருகின்றனர்.
கலை, அறிவியல் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் எனப் பல்வேறு கல்லூரிகளை முஸ்லிம்கள் நடத்திய போதும், மருத்துவக் கல்லூரி மட்டும் ஒரு நெடுநாள் கனவாகவே இருந்து வருகிறது.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
வரவுகள் மேலும் மறுமொழிகள் feeds.

Follow

Get every new post delivered to your Inbox.