சிறப்புடன் நடந்த கோடைகால மாணவ பயிற்சி முகாம்கள்
11:36 மு.பகல் இல் செப்டம்பர் 25, 2008 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்
இளம் மாணவர்களின் இதயத்தில் இஸ்லாமிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் விதமாக வருடந்தோறும் பள்ளி விடுமுறை நாட்களில் தமுமுக சார்பில் கோடைகால பயிற்சி முகாம் நடந்துவருவது அறிந்ததே. இந்த வருடமும் கோடைகால பயிற்சி முகாம்கள் நெல்லை மாவட்டம் புளியங் குடியில் மௌலவி சிவகாசி முஸ்தபா கண்காணிப்பிலும், கிருஷ்ணகிரியில் மௌலவி அப்துல் காதர் நூரி கண் காணிப்பிலும், திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் கோவை சாதிக் அலி கண்காணிப்பிலும் நடைபெற்றன.
பயிற்சி முகாமில் இஸ்லாமிய அடிப்படை, ஒழுக்க மாண்புகள், இறை நம்பிக்கை, ஏகத்துவம், வரலாறு, சமூக சிந் தனை மற்றும் ஆளுமைத்திறன் தொடர் பான வகுப்புகளை பேராசிரியர்கள், மார்க்க அறிஞர்கள், சமுதாய சிந்தனை யாளர்கள் மாணவர்களுக்கு பயிற்றுவித்த னர். பொறியாளர் ஜக்கரியா, பேரா.ஆபி தீன், நூர்முஹம்மது பாகவி, அபுல் ஃபைசல், பெரோஸ்கான், அப்துர் ரஹ்மான் மன்பயீ ஆகியோர் வகுப்பெடுத்த ஆசிரியர் களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
அதிகபட்சமாக நெல்லை புளியங்குடி முகாமில் 130 மாணவர்கள் பங்குகொண்ட னர். பாடங்கள் மட்டுமின்றி வினாடி வினா, சூராக்கள் மனனம், தொழுகைக் கான செயல்முறை பயிற்சி, தேர்வுகள் என முகாம் கலகலப்பாக சென்றது. தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
10 நாட்கள் நடந்த இம்முகாம்களில் இறுதி நாளின்போது மாணவர்களின் கண்கள் கலங்கி இருந்தன. புதிய நட்புகளையும், இனிமையான முகாம் தந்த நினைவுகளையும் தாங்கியிருந்த மாணவச் செல்வங்களை தமுமுக பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் வாழ்த்தி, சமூகத்தில் அவர்கள் ஆற்ற வேண்டிய பங்கினை எடுத்துரைத்து முகாம்களை முடித்து வைத்தார்.
முகாம்களை ஒருங்கிணைக்கும் பணியை மாநில துணை பொதுச் செய லாளர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்கள் மேற்கொண்டார். இஸ்லாமிய மற்றும் சமூகச் சிந்தனையோடு மாணவர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர். அல்ஹம்துலில்லாஹ்!
கருத்துத் தெரிவிக்கவும் »
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI
மறுமொழி இடுக
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
வரவுகள் மேலும் மறுமொழிகள் feeds.