வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?
11:25 மு.பகல் இல் செப்டம்பர் 25, 2008 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக் கென கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப் புகளில் தனி இடஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ள இக்காலக்கட்டத்தில் தமிழக அரசு தேர்வாணையம் மூலமாகவும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக வும் அரசு வேலைக்கு ஆட்களை நியமனம் செய்துகொண்டிருக்கிறது.
அரசு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது மிகமிக அவசியம் ஆகும்.
ஆனால் சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்வ தில் பின்தங்கியே உள்ளனர். அதுபற்றிய அடிப்படைத் தகவல்களை அறியாமல் உள்ளனர்.
எனவே வேலைவாய்ப்பு அலுவலகத் தில் எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து தகவல்களை இங்கே அளிக்கின்றோம்.
குறைந்தது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெற்றதற்கான
(1) மதிப்பெண் சான்றிதழ்
(2) குடும்ப அட்டை
(3) சாதிச் சான்றிதழ்
(4) மாற்றுச் சான்றிதழ்ஆகிய அனைத்துச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங் களில் பதிவு செய்ய வேண்டும். சென்னையில் சாந்தோம் நெடுஞ்சாலை யில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயணன் மாளிகையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
முன்னதாக அலுவலகத்திற்கு காலை 10 மணியளவில் சென்று பதிவு விண்ணப் பம் பெற்று, அதனை முழுமையாகப் பூர்த்தி செய்து, அதனை உரிய அலுவ லரிடம் ஒப்படைக்க வேண்டும். பதிவு செய்தவுடன் பதிவு செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும். அதனை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண் டும். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனை புதுப்பித்து வர வேண்டும்.
கூடுதல் கல்வித்தகுதியோ அல்லது தொழில்நுட்பத் தகுதியோ அதாவது தட்டச்சு, சுருக்கெழுத்து, கணிணி பயிற்சி முடித்திருந்தால் அதையும் கொண்டு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தப் பதிவானது உங்களுடைய எதிர்கால வேலை வாய்ப்புக்கு உறுதுணை யாக இருக்கும்.
இது அல்லாது தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டு தேர்வுகளை நடத்தும். அதனைக் கண்காணித்து தகுதி பெற்றிருந்தால் உடனடியாக விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
கருத்துத் தெரிவிக்கவும் »
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI
மறுமொழி இடுக
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
வரவுகள் மேலும் மறுமொழிகள் feeds.